கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Monday, November 2, 2020

கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்


இலங்கையில் இதுவரையில் 11,335 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 275 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,816 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 5249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6065 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment