இலங்கையில் நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் மாத்திரமே நிகழ்ந்ததாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய மரணங்கள் அதற்கு முதல் இரண்டு நாட்களில் பதிவானது. அனைத்தையும் சேர்த்து நேற்று 9 மரணங்கள் என வெளியிடப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று 9 கொரோனா மரணங்கள் பதிவானதாக வெளியான தகவலை அடுத்து நான் உண்மை நிலைமையை ஆராய்ந்து பார்த்தேன்.
இதன்போது இந்த 9 மரணங்களில் ஒரு மரணம் 19 ஆம் திகதி ஏற்பட்டதாக சுகாதார பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர். மேலும் 4 மரணங்கள் 20ஆம் திகதி இடம்பெற்றவைகளாகும். நேற்றைய தினம் உண்மையாகவே 4 மரணங்கள் தான் பதிவாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கான மரணங்களை சேர்த்தே 9 மரணங்கள் பதிவாகியுள்ளதென சுகாதார பணிப்பாளர் என்னிடம் கூறினார் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் 9 மரணங்கள் நிகழ்ந்ததாக சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
tamilwin
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin