கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பெரளை, வெள்ளம்பிட்டிய, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய கொழும்பு மாவட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்படுகின்றது.

மேலும், ஜாஎல மற்றும் கடவத்தை ஆகிய கம்பஹா மாவட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாளை காலை 5 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு வழமை நிலைக்கு திரும்பும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.