இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதான ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரும், 75 வயதான பெண் ஒருவரும், தெமட்டகொட பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரும், கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும், 72 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயதான ஒருவரும், வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயதான ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது.

6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..