கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவந்த 4 சீனப் பிரஜைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகம் இது குறித்த அறிக்கை ஒன்றை தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய 4 சீனப் பிரஜைகளும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உள்ளூரில்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனத்தூதரகம் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்பு அறிக்கையில் பல்வேறு தமிழ் சொற்பிழைகளும் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.