கொவிட்-19 தாக்கத்திலும் தீபாவளிக்கு தயாராகும் வவுனியா மக்கள் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, November 13, 2020

கொவிட்-19 தாக்கத்திலும் தீபாவளிக்கு தயாராகும் வவுனியா மக்கள்


-வவுனியா தீபன்-

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது வாழ்க்கையின் இருளை நீக்கி , ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நாட்டில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் வவுனியாவில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நகர மத்திய பகுதியில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை புத்தாடை வியாபாரங்கள் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் மிகமிகக் குறைந்தளவிலான மக்களே தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

வழமையில் வெளிமாவட்ட மக்களும் வவுனியா நகரில் புத்தாடை கொள்வனவிற்கு வருகை தருகின்ற போதிலும் தற்போதைய கோவிட் - 19 சூழ் நிலையில் வவுனியா மாவட்ட மக்கள் மாத்திரமே புத்தாடை கொள்வனவு செய்வதினை காணக்கூடியதாவுள்ளது.


No comments:

Post a Comment