ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காகத் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைக் கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று (13) உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் நேற்று (13) நடைபெற்றது.
இந்த விவாதத்துக்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது. இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோதே ராஜித எம்.பி. மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin