கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 24 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

79 வயதுடைய கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் மாரடைப்புக் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை மரண பரிசோதனை அறிக்கை மூலம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.