கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட இசுறுபாய கட்டிடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கட்டிடத்தில் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக நேற்றைய தினம் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.