தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிப்பு

 


மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேல் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு முதல் நாளை (02) காலை 05.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்கு நாளை 05 காலை முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, 011 7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK