முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு.

அன்சார் எம்.ஷியாம்-

அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொறுப்புதாரிகளின் அவதானத்திற்கு

1. கிருமியகற்றிகள் (Sanitizer) கொண்டு பள்ளிவாசல்களும் அதன் சுற்றுப்புறங்களும் சுத்தப் படுத்தப் படல் வேண்டும்

2. பள்ளிவாசல் நுழைவாயிலில் கைகளைச் சுத்தம் செய்து செல்வற்கான ஏற்பபாடுகளை மேற்கொள்ளல்.

3. பள்ளிவாசலில் மிகக் கட்டாயம் முகக்கவசம் அணிதல்

4. ஒரு மீட்டர் இடைவெளி பேணுதல்

5. தரை (கம்பள) விரிப்புகள் அல்லாமல் தொழுகையை நிறைவேற்ற அனுமதியாதிருத்தல்.

6. எல்லா நேரங்களிலும் பாய் போன்ற தரை விரிப்புகளைத் தொழுகைக்காய் உபயோகித்தல்.

7. ஹவ்ல் பாவணையை முற்றாகத் தவிர்த்தல்.

8. பள்ளிவாசலினுள் கூட்டுச் செயல்பாடுகள்,நிக்காஹ், குர்ஆன் மஜ்லிஸ் போன்ற அனுஷ்டானங்களை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைத்தல்.

9. மேலும் அனுமதிக்கப் பட்ட கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ள ஏற்படின் குறித்த பிரதேச பொது சுகாதார வைத்தியரின் வழிகாட்டலின் பிரகாரம் நிறைவேற்றல்.

10. பள்ளிவாசலின் அனைத்துச் செயல்பாடுகளும் நடவடிக்கைககளும் கண்டிப்பாக கொவிட் 19 தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பேணும் வகையில் அமைதல் வேண்டும்.

மேற்படி அறிவுறுத்தல்களையும் கட்டுப்பபாடுகளையும் மீறி செயல்படுமிடத்து- குறித்த பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூட நேரும் என அதன் பணிப்பாளர் A.B.M. அஷ்ரப் அவர்கள் தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post