பல்கலை மாணவர்கள் 20 பேருக்கு பிசிஆர்


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 20 மாணவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  தற்போது தனித்தனியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 20 பேரும் மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ​சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெலிஹுல்ஓயா- பொது சுகாதார பரிசோதகர் லாலித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், பலாங்கொட- ஸ்ரீ பம்பஹின்ன பிரதேசத்துக்கு விடுமுறைக்கு வந்துச்  சென்றுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post