அக்குறணையில் பதற்றம் வேண்டியதில்லை, அவதானம் தேவை! முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, October 30, 2020

அக்குறணையில் பதற்றம் வேண்டியதில்லை, அவதானம் தேவை! முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம்


கொரோனா தொடர்பில் அக்குறணை மக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும், என்றாலும் பதற்றப்படவேண்டியதில்லை என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

அக்குறணை பகுதியில் நபர் ஒருவர் பீ.ஆர்.சி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பீதியடைவதையும் பதற்றமடைவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றி சமூக இடைவெளியை பேனுமாறு வலியுறுத்த விரும்புகிறேன். 

அத்துடன், மீண்டுமொருமுறை இந்த பகுதி முடக்கப்படுவதற்கு காரணமாக யாரும் அமைந்துவிட வேண்டாம். அவ்வாறு மீண்டும் இப்பகுதி முடக்கப்பட்டால், நடுத்தர வருமானம் பெரும் மக்களும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வாதரத்தை கொண்ட மக்களும் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அக்குறணை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மேலும்  ஹலீம் எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment