(முஹம்மட் ஹாசில்)

2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஹொரவபொத்தான பிரதேச சபையின் தலைவர் சாரு உதயங்க விஜேரத்னவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  நேற்று(29) சபையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து வரவு செலவு திட்டம் தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டதோடு இதற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.