(நூருல் ஹுதா உமர்)
நேற்றிரவு சில மணி நேரமாக பெய்த பெரு மழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோணாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தையடுத்து, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையிலான கல்முனை மாநகர சபையினர் துரிதமாக செயற்பட்டு, அவர்களது நேரடி கண்காணிப்பில் சாய்ந்தமருது முகத்துவாரம் தோண்டப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பலத்த மழையும் இடி, மின்னலுமாக அபாயகரமான காலநிலையிலும் மாநகர முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான எம்.வை.ஜெளபர், முஹர்ரம் பஸ்மீர், கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம்.அர்ஷத் காரியப்பர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீன் உட்பட மாநகரசபை ஊழியர்கள் பலரும் ஸ்தலத்தில் நின்று துரித நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கின்றனர்.
இத்துரித நடவடிக்கைகளினால் இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK