நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனை தவிர, மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கான தபால் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் நாட்டின் ஏனைய தபாலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.