திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பல்வேறு போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

போதைப் பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, மதுஷ் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மதுஷின் பிரேதப் பரிசோதனை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் மதுஷின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மதுஷின் மனைவி அவரது சடலத்தை அடையாளம் கண்டு கொண்டதாக கொழும்பு நீதவான் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.