இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவது மற்றும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா பரவல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் பொது இடமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவை என்றால், சபையில் முக கவசம் அணியாமல் உரையாற்ற முடியும்.
சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சரின் கருத்து ஊடாக நாட்டின் சட்டம் ஏனைய நபர்களுக்கு ஒரு விதமாகவும் நாடாளுமன்றத்தில் வேறு விதமாக அமுல்படுத்துவதை காண முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK