விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த பெப்ரவரியில் விசாரணைக்கு


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு மனுமீதான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மகிந்த சமயவர்தன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அமர்வின் முன் இன்று ஆராயப்பட்டது.

முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள், வழக்கு விசாரணைகளை பெப்ரவரி 19 ஆம் திகதி நடத்துவது என தீர்மானித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா இந்த முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முல்லைத்தீவு குருகந்தை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வது தொடர்பான முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி, அவரது உடலை தகனம் செய்தன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி, ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK