கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு தொடக்கம் ஊரடங்கு உத்தரவு


கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சட்டம் ஹம்பகா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுநாள் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக காணப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறையும் அநேக நாட்கள் ஊரடங்கில் இருந்த மாவட்டமாக கம்பஹா மாவட்டமே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK