பொத்துவில் பிரதேசத்தின் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

 


இர்ஷாத் ஜமால்-

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தின் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர் பிரிவுகளான P/03 மதுரஞ்சேனை, P/11, வட்டிவெளி, கிறவல் குளி, P/23, கோமாரி i மற்றும் P/26 ஹிஜ்ரா நகர் (ஜெய்க்கா வீட்டுத்திட்டம்) ஆகிய பகுதிகளே முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

குறித்த பிரிவுகளில் வசிப்பவர்கள் இதர பிரிவுகளுக்கு செல்வதும், இதர பிரிவுகளில் வசிப்பவர்கள் குறித்த பிரிவுகளுக்கு செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் இருந்து பெஹலியக்கொட பொது மீன் விடற்பனை நிலயத்திற்கு மீன் எடுத்துச் சென்ற அறுவர் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது, அவர்களில் ஐவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்னரே குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விழிப்புணர்வு அறிவித்தல், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் என்பன மதஸ்தலங்கள் வாயிலாக அறிவிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த நடவடிக்கைகளை பொத்துவில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr.AU சமட், தவிசாளர் MSA. வாஸீத் மற்றும் பாதுகாப்புப் படையினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK