கற்பிட்டியில் மீனவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, October 24, 2020

கற்பிட்டியில் மீனவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு


- ரஸீன் ரஸ்மின் -

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை (24) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் 40 பேரில் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைக்கு அன்றாடம் மீன் விற்பனைக்காக சென்றுவரும் மீனவர்கள் மற்றும் லொறி சாரதிகள் 40 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போதே குறித்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நபரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையிலிருந்து பூரண பாதுகாப்புடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

“உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் தற்போது பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கற்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment