எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 75,000 குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இதற்காக, 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.