(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை அரசாங்கம் சாதாரணமாக மதிப்பிடக்கூடாது.
நாம் அதனை வைத்து அரசியல் செய்யவோ அரசாங்கத்துக்கு சேறு பூசவோ முற்படவில்லை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலேயே நாம் கருத்தாக செயற்படுகின்றோம்.
அத்துடன் கொரோனவைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5ஆயிரம் ரூபாய் நிவாரணம் எந்தவிதத்திலும் போதாது. தற்போதுள்ள வாழ்க்கைச்செலவுக்கமைய அதனை 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
மேலும் அரசாங்கம் அந்த தொற்று தொடர்பில் மக்களுக்கு எதையும் மறைக்கக் கூடாது. உண்மையான தரவுகளை தெரிவிக்கவேண்டும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கினால் மட்டுமே மக்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு உதவியாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin