ஜனாஸா அடக்கும் பிரச்சினையின் தீர்வுக்கு ஒத்துழைத்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி அவர்களுக்கு நன்றி


இஸ்லாத்தின் பெயரால் பல கொள்கை பிரிவுகளுக்கு மத்தியில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் தாம் விரும்பும் கொள்கை பிரிவை தேர்வு செய்து பின்பற்றுவது அவரவர் சுதந்திரமாகும். 

இவற்றில் அவரவர் கொள்கையை பிரச்சாரம் செய்யும் உரிமை அனைவருக்கும் இருப்பதைப் போல், தான் விரும்பும் கொள்கையை தேர்வு செய்து பின்பற்றும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. 

ஆனால் சில பகுதிகளில் "ஏகத்துவ" கொள்கையைப் பின்பற்றும் சகோதரர்களின் சுதந்திரத்தை முடக்கும் விதமாகவும், கொள்கையைப் பின்பற்ற விடாமல் தடுப்பதற்காக ஏகத்துவ கொள்கையை சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் செயலை கையில் எடுக்கிறார்கள்.

இணைவைக்கும் பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை நடத்த நிர்பந்திப்பதும், ஜனாஸா நிகழ்வில் பித்அத்கள் செய்ய வைப்பதுமென்று ஒருவரின் கஷ்டமான நிலையில் பலி தீர்த்துக் கொள்ளும் செயலை ஆங்காங்கே சில பகுதிகளில் நடைபெறுவதை அவதானிக்கிறோம்.

அந்த வகையில் புத்தளம், புழுதிவயல் பகுதியிலும் ஏகத்துவ வாதிகளின் ஜனாஸாக்களை அடக்குவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது.

அன்மையில் கூட ஒரு கொள்கை சகோதரியின் ஜனாஸாவில் இந்த சிக்கல் ஆரம்பித்து பிறகு சுமூகமான சூழல் ஏற்பட்டது.

இது போன்ற பிரச்சினை முஸ்லிம்களுக்கு மத்தியில் நடை பெறவும் கூடாது, அத்துடன் ஏனைய சமூகத்தினர் முஸ்லிம்களைப் பார்த்துச் சிரிக்கும் நிலையும்  உருவாகக்கூடாது என்ற அடிப்படையில் முஸ்லிம் தேசிய கூட்டணி (அகில இலங்கை மக்கள் காங்ரஸ்) பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இது தொடர்பாக அனைத்து தரப்பையும் ஒன்றினைத்து சுமுகமான ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அதாவது குறித்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களில் எந்த கொள்கை பிரிவை சார்ந்தவராக இருப்பினும் அவரின் ஜனாஸா பிரதேச பெரிய பள்ளிவாசலில் அவரவரின் கொள்கைக்கு உட்பட்டு அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதற்கு பிரதேச பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜம்மிய்யத்துல் உலமா சபை என அனைவரும்  இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டு சட்டப்படி யாருடைய ஜனாஸாவையும் அடக்கம் செய்வதற்கு அனுமதியிருந்தாலும், இதைப் பலர் புரியாமல் செயல்படுவதால் பிரச்சினைகள் அதிகரிக்கிறது. அவரவர் விரும்பும் கொள்கையை பின்பற்றும் சுந்ததிரம் அனைவருக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து செயல்பட்டால் முஸ்லிம்களுக்கு மத்தியில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது.

இந்த விடயத்தை கையிலெடுத்து ஒவ்வொரு அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் இனைக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பாக இருந்த முஸ்லிம் தேசிய கூட்டணி (அகில இலங்கை மக்கள் காங்ரஸ்) பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி அவர்களுக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புழுதிவயல் கிளை சார்பாகவும், தலைமை சார்ப்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் இது போன்ற நல்ல செயல்களைச் செய்ய மற்ற பகுதியில் உள்ளவர்களும் முன் வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இது போன்று முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

S.K ஷிஹான்

செயலாளர்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK