16 கிராம் மற்றும் 882 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (03) தீர்ப்பாளித்தார்.
இரு குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்ததாக முடிவு செய்த பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளியான வெலிவிட்ட சாயக்காரகே அசங்க சஞ்சீவ, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போது கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK