மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட


திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், அவருக்கு குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து புதன்கிழமை (02) தீர்ப்பளித்தார்.


 கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  


கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


 குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 


மதரஸாவுக்குசென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்