சூப்பர் முஸ்லிமுக்கும் எனக்கும் தொடர்பில்லை - மறுக்கிறார் Dr றயீஸ் முஸ்தபா


“சூப்பர் முஸ்லிம்” எனும் குழுவுடன் எனக்கு தொடர்புள்ளதாகவும், நான் கல்முனையில் தீவிர சிந்தனைகளைப் பரப்புவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்பதை நான் தெளிவாக மறுக்கின்றேன். 

இக்குழுவுக்கும் அதன் சிந்தனைகளுக்கும் எனக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என்பதை திட்டமாகத் தெரிவிக்கின்றேன்.

என் பெயரிலே வேறொரு மருத்துவர் இருப்பதன் காரணமாக இக்குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், நான் கல்முனையில் வசிப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸ் பகுதியில் வாழ்ந்து, இலண்டனிலுள்ள ஒரு சிறுவர் தீவிர சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.

மேலும், நான் எப்போதும் சமத்துவமான மற்றும் நேர்மையான பார்வைகளை ஆதரித்தவன். தீவிரவாத சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிராகச்செயற்பட்டு வருகிறேன். எந்தவொரு தீவிரவாத அமைப்பிற்கும் எனக்கும் தொடர்புல்லை என்பதையும், அவற்றின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்பதையும் மறுபடியும் வலியுறுத்துகிறேன்.

“Dr. Rayes” என்ற பெயருடன் பலர் இருப்பதால், என் அடையாளத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்:

நான் Dr. Rayes Musthafa, குழந்தை மருத்துவ நிபுணர் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர், போர்ட்லாண்ட் மருத்துவமனை, இலண்டன், இங்கிலாந்து. (நான் MOH டாக்டரல்ல)

மேலும், சமூக சேவையாளராகச்செயற்பட்டு, அப்ரார் அறக்கட்டளை (Abrar Foundation) என்ற அமைப்பின் தலைவர் என்ற முறையில் கல்வியூடாக சமூக மேம்பாட்டை ஊக்குவிக்க செயற்பட்டு வருகிறேன். 

இது தேசிய முன்னேற்றத்திற்காகக் கல்வியை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு. அதே சமயம், ரஜரடா பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஆரம்பகால நிறுவனர் குழுவின் விரிவுரையாளராகவும், அதன் முதல் குழந்தை மருத்துவத்துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளேன்.

எனவே, Dr. Rayes எனும் பெயருள்ள வேறு யாருடனும் என்னைக்குழப்ப வேண்டாமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன என்பதால், இதனைத்தெளிவுபடுத்தும் வகையில் இவ்வறிக்கையை வெளியிடுகிறேன்.

உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி.

Dr. Rayes Musthafa

குழந்தை மருத்துவ நிபுணர் & 

குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர்

போர்ட்லாண்ட் மருத்துவமனை, 

இலண்டன், இங்கிலாந்து

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்