கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் என்றால், தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மற்ற சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான கைதிகள் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்த்துள்ளன
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK