சிறப்பாக இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இப்தார் நிகழ்வு



(றபாயிஸ் முஹம்மட் றிவி)


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகப் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித்தின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நேற்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.



ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எம்.எஸ்.எம். ஸாகிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசல் தலைவர் ஓய்வுபெற்ற பொறியியிலாளர் யூ.எல்.எம். அஜிஸ் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் செய்தி முகாமையாளர் ஏ.எச்.எம்.ஹாரீஸ், பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.எச்.அஸ்ரி, உறுப்பினர் ஏ.கே.ஹஸான் அஹம்மட், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், பிராந்திய செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எப். எம் றஹ்மத்துல்லாஹ் மௌலவி விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார்.



ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர் எம்.எச்.எம்.சிப்ஹான் இப்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன், நன்றியுரையினை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உதவி முகாமையாளர் மஹ்ரூப்.எம்.ஜபீர் நிகழ்த்தினார்.



இதன் போது கலந்து கொண்ட பிரதம அதிதி, கெளரவ அதிதி மற்றும் விசேட அதிதி ஆகியோர்களுக்கு ஸ்கை தமிழ் குடும்பத்தினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்