பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
எந்தவொரு பிரஜைக்கும் இது தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என வ அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்குவதில்லை எனவும், இது தொடர்பில் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
அமைச்சார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் 2025.02.28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும்அமைச்சர் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள மூன்று உப குழுக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அந்தக் குழுக்களின் தலைவர்களினால் முன்னேற்ற மீளாய்வும் சமர்ப்பிக்கப்பட்டன.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK