தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், மக்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் உண்மையான முறைமை மாற்றத்தை கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பல NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
"முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளில் மாற்றியமைக்கப்பட்ட பாகங்களை அரசாங்கம் அகற்றத் தொடங்கியுள்ளது. எனினும், மக்கள் உண்மையான தூய்மைப்படுத்தலை விரும்புகிறார்கள்.
எனவே, 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டம் NPP யிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து பொய் கூறுவோரைத் துடைத்தெறிய வேண்டும்." என எம்பி மேலும் கூறினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK