சர்வதேச மொபைல் சாதன அடையாள (ஐ.எம்.ஈ.ஐ) பதிவு தேவைப்படுவது உள்ளடங்கலாக எந்தவொரு றேடியோ அலைவரிசையை வெளிப்படுத்தும் சாதனங்களும் இன்று முதல் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (டி.ஆர்.சி.எல்) பதிவு செய்யப்படாமல் விட்டால் இயங்க அனுமதிக்கப்படாதென டி.ஆர்.சி.எல்லின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தம்முடன் எடுத்து வரும் சாதனங்கள் இதனால் பாதிக்கப்படாது.
இதேவேளை இன்றைக்கு முன்னர் தொலைத்தொடர்பு இயக்குநர் வலையமைப்புகளில் இணைக்கப்பட்ட ஐ.எம்.ஈ.ஐ பதிவு தேவைப்படும் றேடியோ அலைவரிசை சாதனங்களுக்கு இந்நடைமுறை பொருந்தாதென்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.எம்.ஈ.ஐ ஆனது ஓவ்வொரு அலைபேசியிலும் காணப்படும் 15 இலக்க எண்ணானது பொதுவாக மின்கலம் அகற்றப்பட்டதும் காணப்படும். இல்லாவிடில் *#06#ஐ அழுத்தும்போதும் இதைப் பெறலாம்.
டி.ஆர்.சி.எல்லில் ஐ.எம்.ஈ.ஐ பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனப் பார்ப்பதற்கு IMEI இடைவெளி 15 இலக்க எண்னை 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK