உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை பெப்ரவரி 6ஆம் திகதி முதல் புதிய அமர்வு முன் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டது.
மனுவை விசாரித்த அமர்வின் பல உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றதன் காரணமாக, மனுவை விசாரிக்க புதிய அமர்வை நியமிக்க முடிவு செய்யப்பட்ட பின்னர் திகதி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க கணேபொல மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே திகதி நிர்ணயிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த பாதிரியார் சிரில் காமினி மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடுகளை செய்துள்ளதாகக் கூறும் மனுதாரர், சம்பவம் தொடர்பாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி தன்னை சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த முறைப்பாட்டை பரிசீலித்த முன்னாள் கோட்டை நீதவான், இந்த முறைப்பாடுகள் தொடர்பாக ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அதனை இரத்து செய்யுமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK