பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National Alliance) இணைய தீர்மானித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட எதிர்பார்த்திருந்த போதிலும் அவரது பெயர் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை.
தனது பெயர் வேட்புமனுவில் உள்வாங்கப்படாமைக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மீது அவர் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK