விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

அதிபரை தாக்கிய காதர் மஸ்தானின் இணைப்பாளர்!


கண்ணியமாக மதிக்க வேண்டிய பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல் நடாத்தி அடாவடி செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பாளர் கைது செய்யபடாமல் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றதா என வன்னி மாவட்ட கல்விச்சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

31/07/ 2024 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மண்/பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலைக்குள் புகுந்து காதர் மஸ்தான் ராஜாங்க அமைச்சரின் முசலி இணைப்பாளர் முகமது தன்சீம் கடமை யிலிருந்த பாடசாலை அதிபரை , ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ் அடாவடித்தனம் தொடர்பில் சிலாபத்துறை காவல் நிலையம் மற்றும் வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை. அரசியல் சித்துவிளையாட்டு காப்பாற்றுகின்றது என குறித்த அதிபர் கவலையடைந்துள்ளார்.

இச் செயல்பாட்டால் முசலி பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதுடன்,

குறித்த நபர் வலய கல்விப் பணிப்பாளர் உதவியுடன் ஆசிரியர் அதிபர் இடமாற்றம் போன்ற பழிவாங்கல்களை தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்க விடயம் எனவு கல்விச்சமூகம் தெரிவிக்கின்றது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK