எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) தெரிவித்தார்.
தனியாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு அனைவரது ஆதரவும் தேவை எனவும் தெரிவித்தார்.
காலி நகர மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற “எக்வ ஜயகமு” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தி, புதிய கைத்தொழில்களை நாட்டிற்கு கொண்டு வந்து, இளைஞர்களுக்கான புதிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அது தனது கடமை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஜனாதிபதிக்கு ஆதரவாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா, ஜனநாயக இடதுசாரி முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கலாநிதி கயாஷான் நவநந்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் ஜனாதிபதிக்கு ஆதரவாக மேடையில் நின்றமை விசேட நிகழ்வாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 41 அமைச்சர்கள் எக்வ ஜயகமு நாங்கள் காலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
காலி மாவட்ட மொட்டுக் கட்சி தலைவர் ரமேஷ் பத்திரன, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK