பாடசாலையில், பிள்ளைகள் தன்னம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும்...

பிரதமர் தினேஷ் குணவர்தன



இன்று (2024.06.10) கொட்டாவ வடக்கு தர்மபால கல்லூரியின் கேட்போர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டு மண்டபத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

தர்மபால என்ற பெயர் ஒரு தேசத்தின் உயிர்.  தர்மபால மகா வித்தியாலயம் தாபிக்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேலாகியும் தர்மபாலவின் மகத்தான தேசிய சிந்தனையை பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.  இங்கிருந்து வெளியேரும் பிள்ளைகள், பாடசாலையின் கெளரவத்தை பாதுகாத்து தேசத்திற்கு கீர்த்தியை கொண்டுவரும்  நற் பிரஜைகளாக மாறுகிறார்கள். இந்த வெற்றியை கொண்டு வர எங்கள் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக செய்த கோரிக்கைகளை நான் நன்கு அறிவேன். பிரதமர், பொது நிர்வாக அமைச்சர் என்ற பதவிகளை விட மஹரகம பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றிய சேவையையே நான் விரும்புகின்றேன். உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இந்தப் பாடசாலைகள் அனைத்திற்கும் சேவையாற்ற முடிந்தது.

கட்டிடங்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பிரவேசிக்கக்கூடிய பாடப்பிரிவுகளுடன் பாடசாலைகளை வலுப்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் உருவாக்கும் அடித்தளம். இன்று முதன்முறையாக இப்பாடசாலையில் உயர்தர மாணவர்கள் மூவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இது எவ்வளவு பெருமைக்குரிய விடயம். இப்பாடசாலையின் மீது பெற்றோர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பாடசாலையை பலப்படுத்துவதற்கு தொடர்ச்சியான உந்துசக்தியாக இருந்து வருகிறது.

தர்மபால அவர்களின் காலத்தில் இப் பகுதியில் ஓலைக் கொட்டகைகளில் பாடசாலைகள் நடைபெற்றன. பெற்றோர்கள் ஆசிரியர்களாக வந்து கற்றுக்கொடுத்து நம் பிள்ளைகளை முன்னேற்றுவதற்கு அறிவை சேர்த்தார்கள். அந்த காலகட்டத்திற்குப் பின்னர், இலங்கையில் இதுபோன்ற பாடசாலைகள் ஆயிரக்கணக்கான அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. அதிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் நம் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பல்கலைக்கழகங்கள் மூலமாகவும் நாட்டுக்கு சேவை செய்ய முடிந்தது.

நாம் ஒரு சவாலான எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம். அதுதான் பிள்ளைகள் எதிர்கொள்ளும் எதிர்காலம். பிள்ளைகள் அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் வகையில் பாடசாலையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அந்த நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பிள்ளைகள் மேலும் வளர்கிறார்கள். இலங்கையில் பாடசாலைகளில் கற்கும் அனைத்து பிள்ளைகளும் டியூஷன் செல்வதில்லை. எனவே, இந்த டியூஷன் மூலம்தான் கற்பிக்க முடியும் என்ற கதையை ஏற்க முடியாது. பரீட்சைக்குத் தோற்றும் 40 இலட்சம் பிள்ளைகளில் எத்தனை பேர் டியூஷனுக்குப் போயிருக்கிறார்கள்.


அபிவிருத்தியடைந்துவரும் இன்றைய உலகில் எமது நாடும் முன்னேற்றமடைய வேண்டும். முன்னேற்றத்திற்கு முகம்கொடுக்கும் தலைமுறையை உருவாக்க வேண்டும். அந்த தலைமுறையை வெற்றிபெறும் தலைமுறையாக மாற்றுவதற்காகத் தான் இந்த பாடசாலைகள் ஒவ்வொன்றாக கட்டியெழுப்பப்படுகின்றன. பாடசாலை வாழ்க்கையில் புதிய விடயங்களை உருவாக்கி புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாடசாலை வாழ்க்கையின் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள ஏனைய சகல சிறார்களுக்கும் மேலதிக புதிய தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அந்த எதிர்கால நம்பிக்கையை வழங்குவதற்காக, அரசாங்கம் ஏற்பாடுகள் மற்றும் கொள்கை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

 இங்கு உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க,

“நகரங்களுக்கு வெளியே இதுபோன்ற பாடசாலைகளுக்கு உதவுவது மிகவும் முக்கியம். இப்பாடசாலையில் இருந்து பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது அதற்கு சிறந்த உதாரணம். மாகாண சபையின் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு இவ்வாறான பணிகள் நடைபெறுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 1700 பிள்ளைகளைக் கொண்ட பாடசாலையின் பிள்ளைகள் பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்றுவதற்கு ஆதரவளிப்பது எமது கடமையாகும். பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு. இந்த மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து பிரதமர் தொடர்ந்து எங்களிடம் தெரிவிக்கிறார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ. டி. எஸ். சதீகா உட்பட உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK