விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது மாநாடு கொழும்பில்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது வருட மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும்.

இந்த மாநாட்டின்

முதல் அமர்வில் பிரதம அதிதியாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மார்க்ஸ் அன்றோ ரன்சே கலந்து கொள்வார்.

கௌரவ அதிதியாக இலங்கையின் ஈரான் இஸ்லாமிய குடியரசுத் தூதுவர் டாக்டர் அலி றீஸா டெல்கோஸ் கலந்து கொள்வார்.

பிரதம பேச்சாளராக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ. மன்சூரும் கௌரவ பேச்சாளராக இந்திய - யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மட் அபூபக்கர் கலந்து கொள்வார்.

சண்டே ஐலேண்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்கான் பீ இப்திகார், ஐ.டி. என். வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர் எம். சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம். பிரதானி பஷீர் அப்துல் கையூம், மூத்த ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசீம், எம்.எஸ். அமீர் ஹுஸைன், பிராந்திய ஊடகவியலாளர் எம்.எம்.எம் பஸீர், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன், தினக்குரல் ஆசிரியர் ஆர்.பீ. ஹரன், உதயம் செய்தி ஆசிரியர் சிராஜ் எம். ஷாஜகான் ஆகியோரும் இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.


நிகழ்வில் போரத்தின் உதவித் தலைவர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK