விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

"அமீன் ஊடகத்துறையில் ஒரு மலை"


மலை உடையாது தேர்தலில் போட்டியிடும் சிலரின் தலைதான் உடையும்!

- இன்ஷா அல்லாஹ்!! -

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது வருடாந்த மாநாடு நாளை 30ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இம்முறை இடம்பெறவுள்ள மாநாட்டில் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து பதவிகளுக்கும் பலத்த போட்டியுள்ளது. 

இதில் விஷேடம் என்னவென்றால் தலைவர் பதவிக்காக 05 பேர் போட்டியிடுகின்றனர். 

இவர்களில்,

1. மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் 

2. சிரேஷ்ட ஊடகவியலாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ காதர்

3. சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின்

4. சிரேஷ்ட ஊடகவியலாளர் றிப்தி அலி

5. சிரேஷ்ட ஊடகவியாளர் எம்.எப். றிபாஸ்

ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 29 வருடங்களாக முஸ்லிம் ஊடக அமைப்புகளில் தாய் அமைப்பாக இயங்கிவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அத்திவாரம் முதல் கட்டிடத்தின் வலுவான உயர்ச்சிக்கு பெரிதும் உந்து சக்தியாக இருந்தவர்கள் அன்றிருந்த பல ஊடக ஜாம்பவான்களுடன் தற்போதைய தலைவர் என்.எம். அமீன் அவர்கள் என்பதும் பலராலும் அறியப்பட்ட உண்மை. 

ஆனால், இம்முறை தேர்தலில் மேற்குறித்த ஐவரும் தலைமை பதவிக்காக போட்டியிடுகின்றமை பலராலும் வியந்து பார்க்கப்படுகின்றது. 

இருப்பினும், பலரது நிலைப்பாடானாது;  'அமீன் நானா' என செல்லமாக அழைக்கப்படுதலும், அதே நேரம் 'அமீன் சேர்' எனும் நாமமும் அசையாத இலட்சிணையாக  அவருக்கு முத்திரை பதித்திருக்கின்றது. 

அமீனுக்கு கிடைத்த அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்ற காழ்ப்புணர்சியினால் 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிரேஷ்ட ஊடகவியளாலர் ஒருவரினால் விடப்பட்ட போலியான  அறிக்கையில் 'அமீன் இவ்வருடம் போட்டியிடமாட்டார்'  என்ற எவ்வித உண்மையுமற்ற போலிப் பதிவையும் வெளியிட்டிருந்தார். 

அது மாத்திரமல்லாது நேற்றுகூட இணையதள ஊடகமொன்றில் 'அமீன் போட்டியிடுவதில்லை; வாபஸ்' எனும் வதந்தியை பரப்பி விட்டனர். 

குறித்த  ஊடகப் பிரதானி மார்க்கம் கற்ற நற்பெயர் பெற்றவர்; அவதூறு, போலிச் செய்திகள், பெரியோருக்கு மரியாதை செய்தல் போன்றன அவர்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டும். 

துரதிஷ்டம் அந்த போலிச் செய்தியை உருவாக்கி  அவர்கள் வெளியிட்டமை மனவருத்தத்துக்குரியதாகும்.

இப்படி பல்வேறு உந்துதல்களும், கறுப்பாடுகளும் மேய்கின்ற இக் காலகட்டத்தில் இந்த அமைப்பபை நேசிக்கும் பலரது கோரிக்கைகளுக்கு அமைவாகவே தேர்தலில் களமிறங்குவதாக மதிப்பிற்குரிய என்.எம். அமீன் அவர்கள் வேட்புமனூவின் இறுதி நாளன்று  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள். 

இந்த சந்தர்ப்பத்தில் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களுக்கு எனது வெளிப்படையான ஆதரவை நான் தெரிவிப்பதோடு ஊடகத்துறையில் அவரது மெச்சத்தக்க செயற்பாடுகள் சிலவற்றையும் நினைவூட்டலாம் என நினைக்கின்றேன். 

- ஊடகர்கள் பலரது தொழில் முன்னேற்றங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகள் புரிந்தவர். 

- நாட்டில் பல இக்கட்டான காலகட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து பலருடனும் நேரடியாகவும், மறைமுகமாக குரல்கொடுத்தவர். 

- தான் சார்ந்த சமூகத்திற்கான தொண்டுகளை ஆற்றியுள்ள போதிலும் அனைத்து சமூகத்தினருடனும் இனவாதம், வேற்றுமைகள் இல்லாது  நற்பண்புடன் பழகும் குணம் கொண்டவர். 

- நிர்வாகத் திறமையால் இன்று வரை இந் நாட்டில் வேரூன்றியுள்ள இந்த ஊடக அமைப்பை கட்டிக்காப்பவர்.

- ஊடகவியலாளர்களின் நலன்கலுக்காக பலகோணங்களிலும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்து ஒத்தசை நல்கும் அழகிய குணம் கொண்டவர். 

- பத்திரிகை பிரதம ஆசிரியராக இருந்தாலும், அமைப்பின் தலைவராக இருந்தாலும் எந்த நபர்களையும் நண்பர்களாக அரவனைத்துச் செல்லும் மனோ பக்குவமுடையவர். 

- இலங்கையிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளின் மரியாதைக்குரியவரும், நன்மதிப்பு பெற்றவரும் கூட...

- தனது 72 வயதிலும் கூட இறைவன் அருளால் ஆரோக்கியமாகவும், நிதானித்தும் ஊடகத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள பலரதும் அபிமானம் பெற்ற மனிதர். 

- வெளிநாட்டு இராஜதந்திர உறவுகளைப் பேணி அதனூடாக பல உதவிகளை ஊடகர்களுக்கு புரிந்தவர். 

- 30 வருட யுத்த காலத்திலும் கூட புல்மோட்டைப் பிரதேசத்தில் சிக்கிய முஸ்லிம் வலிபர்களின் நலனுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடியாக பேசியவர். (தெளிவு தேவையானவர்கள், அமீன் சேர் இடம் நேரடியாக கேட்கலாம்)

-இவ்வாறு என்.எம். அமீன் அவர்களின் பிரபலம், நற்குணம், சேவைகள், தொண்டு  பற்றி அடிக்கிக் கொண்டே செல்லலாம். 

அப்படியான ஒரு மரியாதைமிக்க மனிதரை எதிரத்து தலைவர் பதவிக்காக மேற்குறித்த நால்வரும் களமிறங்கியுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

எது எவ்வாறாயினும் அமீன் என்பது ஊடகத்துறையில் ஒரு Brand name. அமீன் அவர்களின் வெற்றி; உறுதிசெய்யப்பட்ட வெற்றி என்பதில் நான் உறுதியாக உள்ளேன். 

இன்ஷா அல்லாஹ்!

என்னுடய நன்றியுணர்வு அமீன் சேர் இற்கு எப்பவும் உள்ளது. 

அவரால் வளர்ந்த பலர் நன்றி கெட்டு அத்தனையும் மறந்து இன்னொருவக்கு வாக்களிப்பது அவரவர் மனசாட்சிக்குரிய பதில். 

குறிப்பாக இதில் போட்டியிடும் நால்வர் கூட உங்கள் மனசாட்சியிடம் சற்று பேசிப்பாருங்கள். 

உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் என்.எம். அமீன் எந்தளவு முன்னிலையானவர் என்பது உணரப்படும். 

ஆட்சி அதிகாரத்தை கொடுப்பவனும்; எடுப்பவனும் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே! 

வெற்றி தோல்வி இறைவனிடமுள்ள முடிவு! 

அதை யாராலும் மறுக்க முடியாது. 

இந்த ஜனாநயக தேர்தலில் எனது வாக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களுக்கு என்பதை நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன். 

தேர்தலில் களமிறங்கியுள்ள  நீங்கள் அனைவரும் எனக்கு மிக நெருக்கமானவர்கள்தான் இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் இன்றுவரையான எனது  ஊடகப் பயணத்தில்  "அமீன் என்பது ஒரு மலை"  

'தலையை கொண்டு மலையில் முட்டினால்; மலை உயைாது தலைதான் உடையும்' 

ஒரு ஜனாநாயக தேர்தலில் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டையும், உரிமையையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும்  கூறியுள்ளேன்! 

ஊடக நணாபர்களே!

உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

✍️ கியாஸ் ஏ. புஹாரி

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK