(தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு )
இன்றளவிலான நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு தோன்றியது? அதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர் யார்? அதனை எவ்வாறு தீர்த்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றிய முறைசார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்குப் பதிலாக அவையனைத்திற்குமே பொறுப்புக்கூறவேண்டிய குழுவினாலேயே இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து கரைசேர்வதற்குள்ள ஒரே வழி ஐ.எம்.எஃப். எனவும், ஐ.எம்.எஃப். உடன் கொடுக்கல்-வாங்கலை மேற்கொள்ளப் பொருத்தமான குழு இந்த குழுவே என்பதும், அந்த கொடுக்கல்-வாங்கலை முன்னெடுத்துச் செல்வதன்மூலமாக இந்த பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியுமெனவும் கூறி சமூகத்திலே ஒரு கட்டுக்கதையை உருவாக்கி வருகிறார்கள். அந்த நிலையில் மக்கள் எதிர்நோக்குகின்ற உண்மையான நிலைமையை தெளிவுபடுத்திக் கூறவேண்டியுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே ஆட்சிசெய்திருப்பின் இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்திருக்கமாட்டாது. நாடு பாரியளவிலான அபிவிருத்தியை அடைந்திருக்கும் என்பதைப்போலவே ஐ.எம்.எஃப். இன் கதை ஏற்புடையதாக அமையமாட்டாது. அவர்களின் ஊழல்மிக்க முறைமைக்குள்ளே ஒரே தீர்வுதான் இருக்கின்றதென அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த தீர்வு அவர்களிடம் மாத்திரமே இருக்கின்றதெனக் கூறுகிறார்கள். அந்த தருணத்தில் நாங்கள் அதிகாரத்தை எடுத்திருப்பின் ஐ.எம்.எஃப். இடம் செல்லாமல் மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ளக்கூடிய நிலைமையே உலகில் திறந்திருந்தது. கடன்கொடுனர்களுடன் முறைசார்ந்த பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கலாம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிராத குழுவிற்கு மாத்திரமே அவ்வாறு செல்லக்கூடியதாக இருந்தது. இங்கு நிகழ்காலத்தில் இருக்கின்ற பிரச்சினைக்கு ஐ.எம்.எஃப். இடம் செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது. அதனால் இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்ன செய்துகொண்டிருக்கிறது? உண்மையிலேயே இத்தருணத்தில் எமக்கு அதிலிருந்து வெளியே வருவதற்கான இயலுமை கிடையாது. உடன்படிக்கையின் பிரகாரம் ஐ.எம்.எஃப். அரசாங்கத்திடம் முன்வைத்த பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள “ஒட்டுமொத்த பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்வதற்காக உங்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தை முகாமைசெய்துகொள்க. உங்களின் நாட்டை முன்னேற்றுவதற்கான உங்களின் திட்டத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்பதுதான். அரசாங்கம் அந்த அளவுகோல்களை எடுத்துக்கொண்டு நாட்டைக் கரைசேர்க்கின்ற திட்டத்திற்குப் பதிலாக அதன்மூலமாக தோன்றுகின்ற அனைத்துச் சுமைகளையும் மக்கள்மீது சுமத்துகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப். வருமானத்தை முகாமைசெய்துகொள்ளுமாறு கூறுகையில் வருமானம் ஈட்டுகின்ற வழிவகைகளை முன்னேற்றுவதையே செய்யவேண்டும். வருமானத்தில் விரயம் ஏற்படுகின்ற இடங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அரசாங்கம் வருமானத்தை நாசமாக்கிக் கொள்வதையும் சாதாரண மக்கள்மீது வரிச்சுமையை சுமத்துவதையும் மாத்திரமே செய்துள்ளது. ஊழல் மோசடி இடம்பெறுவதை நிறுத்திவிடவில்லை.
எங்களுக்கு இந்த பிரச்சினையின்போது மக்களிடமிருந்து ஆணையொன்றை கோரவேண்டியுள்ளது. மீண்டும் ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு குறிப்பாக உயர்மட்டத்தில் நிலவுகின்ற மாறிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் பிஸ்கால் (நிதி) முகாமைத்துவத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதும் பற்றிய பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் வருமானத்தை தயாரித்துக்கொள்கின்ற விதம், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்கின்றவிதம் எத்தகையது என்பதாகும். அதைப்போலவே பெற்றுள்ள இந்த கடன் பற்றிய புலனாய்வினை மேற்கொண்டு, அதுபற்றிய விசாரணை அறிக்கையுடன் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டத்துடன் அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான இயலுமை எமக்கு இருக்கின்றது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை அகற்றி கூட்டாக முன்நோக்கி நகர்வதற்காகவே மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகின்றது. நாங்கள் இதற்கு முன்னரும் ஐ.எம்.எஃப். ஐ சந்தித்தோம். எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கான இணக்கத்தை தெரிவித்தார்கள். இந்த வார இறுதியில் நாங்கள் மீண்டும் ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இதன் உண்மையான பிரதிவாதிகளை மறைத்துவைத்து அரசாங்கம் முன்நோக்கி நகர முயற்சி செய்தாலும் அது சிரமமானதாக அமைகின்றது. ஐ.எம்.எஃப். மீண்டும் ஆளுகை பற்றிய விடயங்களை கண்டறியவும் பகுப்பாய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்தது. அதன்போது ஆளுகையில் நிலவுகின்ற பலவீனங்கள், மோசடிகளுக்கு வழிசமைக்கின்ற விதம், மோசடிகளுடன் தொடர்புபடுகின்றவிதம் பற்றி விபரமாக முன்வைத்துள்ளது. 2023ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதன் நடைமுறை செயற்பாடுகளுக்குச் செல்லவில்லை. சட்டங்கள் அமுலாக்கப்படாவிட்டால் சட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றை மேற்கொண்டாலும் பலனில்லை. ஏனைய அரசாங்கங்களைப்போலவே ஐ.தே.க. அரசாங்கமும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டது. அதைப்போலவே மத்தியவங்கி பிணைமுறி மோசடியை மேலெழுந்தவாரியாக எடுத்துக்கொண்டால் ஆவணங்களில் பார்த்தால் எல்லாவேளையிலும் சட்டத்திற்குள்ளேதான் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தருணமாகும்போது திறைசேரி உண்டியல் பிணைமுறிகள் விநியோகிக்கப்படுகின்ற முறையியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிரெக்ற் முறைக்குப் பதிலாக ஒப்ஷன் மெதட் மாற்றப்பட்டது. மேலெழுந்தவாரியாக பார்க்கையில் ஒப்ஷன் திட்டம் நல்லது. அவர்கள் உள்ளக தகவல்களைப் பாவித்து இந்த வேலையை வடிவாகச் செய்தார்கள். இன்றும் அது பற்றிய தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. ஆளுகை பற்றிய விடயங்கள் புலனாய்வு அறிக்கைகள் பலவற்றில் வந்துள்ளன. இந்த அரசாங்கங்கள் அதில் தலையீடு செய்வதில்லை. இன்றும்கூட திறைசேரி மற்றும் பிணைமுறி உண்டியல்களை வழங்குகையில் நிதிச்சந்தையில் இருக்கின்ற குழுக்களால் அதிகாரத்தை வகிக்கின்ற ஒருசிலரால் நுணுக்கமான முறையில் வட்டிவீதமும் தகவல்களும் அங்குமிங்கும் நகர்த்தப்பட்டு மக்களின் பணத்தை மக்களுக்கே கடனாகக்கொடுத்து இடையீட்டாளர்கள் என்றவகையில் ஒன்றுசேர்ந்து பில்லியன் கணக்கில் செல்வத்தை ஈட்டுகின்ற அநீதியான முறைமையொன்று அமுலில் இருக்கின்றது. அதைப்போலவே ஸ்பெஷல் கொமொடிட்டி டெக்ஸ் ” விசேட வியாபாரப் பண்ட வரி” இது நல்ல வரியொன்றின் பண்பு அல்ல. எல்லாநேரத்திலும் இது பாவிக்கப்பட்டது உற்பத்தியாளனை பாதுகாக்கவோ அல்லது பாவனையாளரை பாதுகாக்கவோ அல்ல. அவர்களுக்கு நெருக்கமான ஒருசிலருக்கு அநுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காகும். இரண்டு சந்தர்ப்பங்களில் புரிந்தார்கள். இரண்டு சந்தர்ப்பங்களில் சீனி வரி மோசடியைப் புரிந்தார்கள்.
2015 அரசாங்கக் காலத்தில் நெருக்கடியொன்று தோன்றுகையில் அந்திய செலாவணியைத் தேடிக்கொள்வதற்காக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக உற்பத்தியை அதிகரித்து பன்வகைமைப்படுத்தலுக்குச் செல்லவேண்டும். அதற்குப் பதிலாக அரசாங்கங்கள் ஏதேனும் உபாயமுறைகளைப் பாவிக்கின்றன. அதில் பிரதானமான ஒன்றுதான் மீள்ஏற்றுமதி எனப்படுகின்ற மோசடியை மறைப்பதாகும். உலர் பாக்கு (கருங்கா), மிளகு, தேயிலை மீள் ஏற்றுமதி செய்தலை அதன்கீழ் மேற்கொண்டார்கள். உலகின் தேயிலை எற்றுமதியில் முதலாமிடத்தில் இருந்த இலங்கை மீள் ஏற்றுமதியின்கீழ் 5 ஆம் இடத்திற்கு விழுந்தது. அந்த அரசாங்கங்கள் இந்த மோசடியை தொடர்ச்சியாக புரிந்துவந்தன. இன்று முழுநாடுமே நெருக்கடியில் இருக்கின்றது. எனினும் அரசாங்கம் மீண்டும் அதே இடத்திற்குச்செல்ல முனைகிறது. 2024 பெப்ரவரி 19 ஆந் திகதிய 2372/04 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அமைச்சரவை அங்கீகாரம் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பெறுமதி சேர்த்த பண்டங்களின் உற்பத்திக்காக ஒருசில பண்டங்களை இறக்குமதிசெய்ய இடமுண்டு. இலகுவில் திருடக்கூடிய இஞ்சி, மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, ஏலம் போன்ற பண்டங்களை இறக்குமதிசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐ.எம்.எஃப். முன்வைத்த ஆளுகை பற்றிய புலனாய்வு அறிக்கைகளில் பல விசேட துறைகளில் அபாய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. “உங்கள் நாட்டின் ஆட்சி மிகவும் சிக்கலானது. குறிப்பாக அரச செயற்பாடுகள் சிக்கல் நிறைந்தவையாகும். அவற்றை தவிர்த்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மென்மேலும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். அதைப்போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகளில் வருமான முகாமைத்துவம் தொடர்பிலான பலவீனங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கொள்வனவுகளில்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புறொகியுமன்ற் மெனேஜ்மன்ற் மிகவும் ஊழல் நிறைந்தது. அன்சொலிசிடட் டெண்டர்களுக்குச் செல்லும்போது போட்டித்தன்மை கோரப்படுவதில்லை. அமைச்சருக்கோ அல்லது அவருடைய குழுக்களுக்கோ பாரியளவிலான கொமிஸ்பெறுதலை நோக்கிச் செல்வதற்கான இயலுமை கிடைக்கிறது. கொள்வனவு செயற்பாடு வெளிப்படைத்தன்மைமிக்கதாக அமையவில்லை. போட்டித்தன்மை கிடையாது. வலுச்சக்தித்துறை மிகவும் முக்கியமானதாகும். அது ஒரு சேவை மாத்திரமல்ல, பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. எதிர்காலத்தடன் தொடர்புபடுகின்றது. இந்த அரசாங்கம் அந்த வலுச்சக்தியை முறைப்படி நெறிப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களை முன்னேற்றி, நாட்டின் வலுச்சக்தியை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி, சந்தையை விரிவாக்கி நாட்டை முன்னேற்றுவதற்குப் பதிலாக அதிலும் மோசடி – ஊழல்களைப் புரிய நடவடிக்கை எடுக்கின்றது.
அண்மையில் பேசப்பட்ட விடயங்கள், அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்த, இந்தியாவுக்கு கொடுக்கப்போகின்றவற்றின் பவர் பேர்சஸ்களின் உடன்படிக்கைகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் விலைமட்டங்கள் மிகவும் உயர்வானவை. புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முகவராண்மைகளிலிருந்து பெற்றுக்கொண்ட அறிக்கைக்கு அமைவாக 2021 வரை அந்தந்த வலுச்சக்திகளின் உற்பத்திக் கிரயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2010 தொடக்கம் 2021 வரை புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி 10 வருடங்களுக்குள் சூரிய வலுச்சக்தியில் 88% உம் காற்றுவிசையில் 68% உம் படுவேகமாக உற்பத்திக்கிரயம் குறைவடைந்துள்ளது. அதைப்போலவே அதன் கொள்திறன் அதிகரிக்கின்றது. அத்தகைய மூலங்கள் மீதே நாங்கள் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது. இந்த அறிக்கைக்கிணங்க எமக்கு செலவாகின்ற கிரயம் ஒரு கிலோ வொற்றுக்கு ரூபா 10 இற்கும் 15 இற்கும் இடைப்பட்டதாகும். ஆனால் நாங்கள் பத்து வருடங்கள் போன்ற எதிர்காலத்திற்காக ரூபா 50 அளவில் கொள்வனவுசெய்வதற்காக பவர் பேர்சஸிங்கிற்கு போகிறோம். நாட்டுக்கு மக்களுக்கு எவ்வாறான தாக்கம் ஏற்பட்டாலும் இந்த ஆட்சியாளர்கள் தமது பைகளை நிரப்பிக்கொள்ன முனைகிறார்கள். இந்த குழுக்கள் எமது முன்னிலையில் படைக்கின்ற காட்சியானது வெறுமனே நாங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக புரிகின்ற வேலை மாத்திரமன்று. அதனை ஒரு சாதனமாகப் பாவித்து அவர்கள் திருடவும் தமது சுகபோகங்களை அதிகரித்துக்கொள்ளவும் எத்தனிக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு அதிகாரம் அத்தியாவசியமாகின்றது. அதனாலேயே தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல்களை பகுப்பாய்வுசார்ந்தவகையில் பாருங்கள், அதன் பின்னர் விளங்கி்க்கொள்ளுங்கள் என நாங்கள் தொழில்வாண்மையாளர்களிடம் முன்மொழிகிறோம். இந்த நாட்டை ஊழல்மிக்க முறையியலில் இருந்து காப்பாற்றிக்கொள்கின்ற திசையை நோக்கி மாற்றியமைத்திட நடவடிக்கை எடுப்போம்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK