இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்


அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான 'சமன் கொல்ல' என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு அறிவுறுத்தாமை இந்த பணி இடைநீக்கத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி இயக்குனராகவும், கணனி செயற்பாட்டாளராகவும் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK