”தம்பிளாட கடே யனவத” ஹிருனிகாவுக்கு வந்த கமெண்ட்ஸ்

வைத்தியர் ஷாபிக்கு ஏற்பட்ட பிரச்சினையின் பொழுது அவருக்காக குரல் கொடுத்த காரணத்தால் தனக்கு எவ்வாறான பிரச்சினைகள் வந்தன என்பது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஒரு தனியார் ஊடகத்துக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு.

“அந்த டொக்டர் சாபியின் பிரச்சினை வரும் பொழுது எனது மூன்றாவது பிள்ளையை நான் பெற்றெடுக்கவிருந்தேன். இந்த பிரச்சினை சகல இடங்களிலும் வைரல் ஆன காரணத்தால் நான் எனது வைத்தியரிடம் இவ்வாறு கேட்டேன்.


வைத்தியரே அப்படி ஒரு பெண்ணுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? அதற்கு டொக்டர், ஹிருணிகா ஒரு சீசர் செய்யும் பொழுது 10 பேருக்கும் மேலாக சுற்றி இருப்பார்கள். அந்தத் 10 பெரும் வயிற்றை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிள்ளையை எடுப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படி அதனை இலகுவில் செய்து விட முடியாது.

எனவே நான் அன்றில் இருந்து டொக்டர் ஷாபிக்காக முன்னின்றேன். நான் அமைச்சர் ராஜித மற்றும் இரான் விக்ரமரத்ன என்று நினைக்கின்றேன் அரசியல் வாதிகள் என்று நாங்கள்தான் டொக்டர் ஷாபி பக்கம் நின்றோம்.

எனக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் இட்ட கமெண்ட்ஸ் நன்றாக நினைவில் உள்ளது. “தம்பிண்ட கடே யனவாத” இந்த வார்த்தையைத்தான் பாவித்தார்கள். நீயும் சிங்களவர்தானே? நீயும் ஒரு அம்மாதானே? எனக்கு இன்று போல் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் அதில் எதற்கும் பதில் கொடுக்கவில்லை. நான் உண்மையில் அமைதியாக இருந்தேன்.

இறுதியாக 8000 மலட்டு தாய்மார்கள் 4000 ஆனது. இறுதியாக அந்த 4000 தாய்மார்களில் அனைவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. ஒருவருக்கு மட்டுமே பிள்ளை இல்லாமல் இருக்கிறது. இயற்கை காரணங்களால்.

டொக்டர் ஷாபி எவ்வாறான துன்பங்களுக்கு முகம் கொடுத்தார் என்பது எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். அவர் மட்டுமல்ல அவருடைய குடும்பமும்தான். அவர் விடுதலையாகி வந்தவுடன் என்னுடன் பேசினார்.

இறுதியாக அவருடைய பிள்ளைகளும் 9ஏ சித்திகளை பெற்று பரீட்சையில் சித்தியடைந்தார்கள். அவருடைய மகளும் என்னை போன்று பயமில்லாத ஒருவராக வரவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

இதற்கு பின்னர் நான் எப்படி ஷாபியின் முகத்தை பார்க்க முடியும்? எனக்கு எப்படி பேச முடியும்? நான் சிங்கள பௌத்தர் என்றாலும் எனக்கு முஸ்லீம் தமிழ் நண்பர்களும் உள்ளனர்.

எனவேதான் இனவாதம் பேசிய எந்த ஒரு நபரும், அதனை பகிரங்கமாக செய்த எந்த ஒரு அரசியல் வாதியும் உள்ள மேடையில் நான் ஏற மாட்டேன் என்று தனிப்பட்ட ரீதியில் முடிவு செய்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK