டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகையில் ஜனாதிபதித் ​தேர்தலின் போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர் ஒருவர் பத்து ​கோடி வரை பேரம் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை இப்போதிருந்தே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு ஆதரவைத் தரும் பட்சத்தில் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை வழங்குவதாகவும் வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள்  தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுமாறு அவரிடம் ​வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிலும் ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவளிப்பதற்காக டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் வரை அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாக்களித்துள்ளார்.

எனினும் குறித்த வேட்பாளரின் கோரிக்கையை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK