விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

நிந்தவூர் பிரதேச சபையின் கவனத்துக்கு

நிந்தவூரில் மிகவும் பிரபல்யமானதும் மக்கள் அதிகமாக பயணிக்கும் ( 3) முன்றாம் குறுக்கு தெரு வீதி சுமார் இரண்டு ( 2 ) கிலோ மீட்டர் கொங்கீரிட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டாலும் காட்டுர சந்திக்கும் மாந்தோட்ட சந்திக்கும் இடையில் சுமார் 50 மீட்டர் இடைவெளி உள்ள பாதை புனரமைப்பு செய்யப்படாமல் விடுபட்டு குண்டும் குழியுமாக காணப்படுகின்றன இதனால் மக்கள் மழைக்காலம் மட்டுமல்ல வெயில் காலங்களிலும் போக்குவரத்து செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர் 

அத்தோடு இந்த குண்டு குழியுடனான வீதியை நற்சந்தி தொடர்பட்டு இருப்பதினால் வீதியால் செல்லும் வாகனங்களும் விபத்துக்குள்ளாக கூடிய சூழ்நிலை உருவாகின்றன



குறிப்பிட்ட மூன்றாம் குறுக்கு தெரு மீரா நகர் தொடக்கம் வவ்வால் ஓடை சந்தி வரை கொங்கீரிட் வீதியாக காணப்படும் நிலையில் வீதியின் இடையில் 50 மீட்டரை ஏன் புனரமைப்புச் செய்யாமல் விடுபட்டது ஏன் என்பது மக்களின் பல சந்தேகங்களுடன் கேள்விக்குறியாக இருக்கின்றது 

ஆகவே இவ்வவீதியின் அவலநிலையை கருத்தில் கொண்டு நிந்தவூர் பிரதேச சபையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இவ் வீதியால் மக்கள் சிரமமின்றி போக்குவரத்து செய்வதற்குரியதாக புனரமைப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ் வீதியால் பிரயாணம் செய்யும் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்








BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK