BREAKING UPDATE – மின்சார விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டு வர துரித நடவடிக்கைகள்


நாடளாவிய ரீதியில் சுமார்  80% பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, மத்துகம, அவிசாவளை, கம்பஹா, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்திலும் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், நாடு முழுதும் ஏற்பட்ட பரவலான மின்வெட்டு காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK