காழியாருக்கு விண்ணப்பிப்போம் வாருங்கள்கின்னியா அப்துல் அஸீஸின் (நளீமி) முகநூல் பக்கத்தில் இருந்து 

கடுமையான போட்டி ஒன்று இருக்கிறது போல தெரிகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது யார் புதிய காழியார் என்று பார்க்க.

சிறியதொரு வேதனம். காகிததாதிகள் வாங்கவும் பணம் இல்லை. 

இதனை பொறுப்பேற்க குறைந்தது அன்றாட வாழ்வுக்கு போதிய பணம் இருக்க வேண்டும். அல்லது நல்ல தொழில் ஒன்று  இருக்க வேண்டும்.  

சமூகத்தில் கொஞ்சம் மதிப்பு மட்டும்  கிடைக்கும். வேறு இதில் எதுவும் இல்லை. 

அப்படியாயின் இந்தப் பதவியைப் பெற போட்டா  போட்டி ஏன்? 

இந்த மகத்தான பணியை செய்து சுவனம் போகவேண்டும் என்ற ஆசைதான். 

அர்ஷ் நடுங்கும் இந்தப்  பணியை சிரமேற்கொண்டு, கனகச்சிதமாக செய்து அந்த அல்லாஹ்வின் திரு  வதனத்தைபி பார்க்க வேண்டும் என்ற தீராத ஆசைதான்.

மறுமையில் மட்டும்தான்  ஹூருல் ஈன்களை  பார்க்க வேண்டும் என்றும் விசாரணைக்கு வரும் அனைத்து பெண்களையும் சகோதரிகளாகவே பார்ப்பேன் என்றும் திடசங்கர்ப்பம் பூண்டு வாழவே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கப்போகிறேன்.  

அங்கு நடக்கும் மானப்பிரச்சினைகளை மனைவிடம் கூட சொல்ல மாட்டேன் என்று எனக்குள் நான் சத்தியம் செய்து இந்தப்பதவியை ஏற்றுக்கொள்கின்றேன். 

எந்த இலஞ்சமும் வாங்க மாட்டேன் அது gift என்ற பெயரில் வந்தாலும் சரி   சந்தோசம் என்ற பெயரில் வந்தாலும் சரி எடுக்கவே மாட்டேன் என்றும் மறுமையில் நான் அந்த படைத்தவனின் முகத்தை பரவசத்துடன் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று  இந்தப்பதவியை ஏற்றுக்கொள்கின்றேன்.

சனிக்கிழமை என் நேரத்தை கழித்தேன். என் தலையை குடையும் எத்தனையோ ஊத்தைக் கதைகளைக் கேட்டேன், இப்படி என் நாட்கள் கழியப் போகின்றன. உன் திருப்பொருத்தம் மட்டுமே போதும் என்று  இந்தப்பதவியை ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படி யாராவது இப் பொறுப்பை ஏற்க முன்வாருங்கள். அல்லது எல்லோரும் சேர்ந்து இப்படியான ஒருவரை இனியாவது தெரிவு செய்யுங்கள். 

இது ஒரு சமூகப் பொறுப்பு. ஏற்கனவே 10 பொறுப்புக்கள்உள்ள ஒருவர் 11 வதாக இந்தப்பொறுப்பை எடுக்க முன் வர வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

அன்புடன் 

உங்கள் சகோதரன் 

அப்துல் அஸீஸ்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK