பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை, அதற்கான ஏற்பாடுகளை செய்துதாருங்கள் ..! - எம். எஸ் தௌபீக் எம்.பி பாராளுமற்றில் கோரிக்கை.

 


(எஸ். சினீஸ் கான்) 

"2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிற்பாடு பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதாருக்கள்" என  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் 2024 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் புதன்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே தௌபீக் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாகியும் காணிப்பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இது தொடர்ப்பில் பல சந்தப்பங்களில் பேசியும் உரிய அதிகாரிகளை சந்தித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் தெரித்தார்.

திருகோணமலை மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் என்பதால் அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகத்தர்தர் குறைபாடு காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி  செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK