அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான சுற்றறிக்கை


அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கு விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 4,000 ரூபா முற்பணமாக வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்பணம் ஜனவரி முதலாம் திகதி முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 29 ஆம்  திகதி வரை வழங்கப்பட உள்ளது.

திறைசேரியின் உடன்படிக்கையின் படி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.

இந்த முற்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் திரும்பப்பெற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK