இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!


பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை நேற்று  (05) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,



“ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின் அவல நிலை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடினோம். பலஸ்தீன் – இஸ்ரேல் மோதலை உடன் நிறுத்தும் வகையில், ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மகஜர் உரியவர்களிடம் சென்றடைந்துள்ளதாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றத்துக்கு  எதிர்காலத்தில் ஐ.நா.வின் ஆதரவு குறித்தும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்புப் பேச்சுக்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினோம்” என்று கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post